மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பிரச்சாரம்செய்ய உ.பி. பாஜக 200 மினிவேன்களை களம் இறக்கியுள்ளது. ‘வருகிறார் மோடி’ என்ற பெயரில் இந்தவேன்கள் மாநிலம் முழுவதும் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிப்பதாவது , ‘எந்த ஒரு தனி வேட்பாளர்களுக்கும் என்று இல்லாமல் பா.ஜ.க.,வுக்காக இந்த ‘ஹைடெக்’ வாகனங்கள், மாநிலம் முழுவதும் பயணம்செய்து தேர்தல் பிரச்சாரம்செய்யும். இதில், அனைத்து வகை நவீன வசதிகளும் உள்ளன.

இந்தவகை வாகனங்களை முதன் முதலில் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார். தற்போது, அதேபோன்ற வாகனங்கள் இங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், பா.ஜ.க.,வின் பிரச்சாரப்படங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் பேச்சுக்களை ஒலி, ஒளி பரப்பும்வகையில் 5க்கு 4 அடி அளவுகளிலான டிஜிட்டல் டி.வி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. உ.பி. மாநிலம் முழுவதும் மின் வெட்டு நிலவுவதால் அந்த வாகனங்களில், சக்திவாய்ந்த பேட்டரிகளுடன் கூடிய ‘இன்வெர்ட்டர்கள்’ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply