டெபிட் கார்டு மற்றும் கிரெடிட்கார்டு பயன்படுத்தி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, MDR கட்டணத்தை இனி மத்திய அரசே ஏற்கஇருக்கிறது.

வணிகத் தள்ளுபடி விகித கட்டணமானது டெபிட்கார்டு மட்டும் இல்லாமல் யூபிஐ பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் கிடைக்கும் என்பது சிறப்பு.

பொருட்கள் விற்பனையின்போது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டும் பீம், யூ.பி.ஐ உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இதுவே MDR கட்டணம் என்றழைக்கப் படுகிறது.

ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ரூ.20 லட்சம் வரை ஆண்டு விற்றுமுதல் கொண்ட சிறிய வர்த்தகர்களுக்கு MDR கட்டணம் 0.40 சதவீதமாகவும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான ஆண்டு விற்றுமுதல் கொண்ட சிறிய வர்த்தகர்களுக்கு MDR கட்டணம் 0.90 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை விட, வர்த்தகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் பொருட்கள் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம், யூ.பி.ஐ பரிவர்த்த னையை ஊக்குவிக்கும் வகையில் புதியசலுகையை அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி ரூ.2000 வரையிலான பரிவர்த்த னைகளுக்கு வங்கிகளுக்கான MDR கட்டணத்தை இனி வர்த்தகர்கள் செலுத்த தேவை யில்லை, அதனை மத்திய அரசே ஏற்கும். வரும் ஜனவரி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இச்சலுகையை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சிறியளவில் ஷாப்பிங் செய்யும்போது வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வணிகர்களும் பயன் அடைவார்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply