2007ம் ஆண்டிலிருந்தே   வெளியாகி வருவம்  டி.என்.பி.எஸ்.சி வினா தாள்கள் தமிழ்நாடு அரசின் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுக்கான வினா தாள்கள் சென்ற 2007ம் ஆண்டிலிருந்தே வெளியாகி வருவதாக அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமிபத்தில் நடந்த குரூப் 2 தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே

வெளியானதால் அந்ததேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பலரை கைதுசெய்துள்ளனர். இந்த நிலையில் கையால் எழுதப்பட்ட குரூப் 2வினாத் தாளின் பிரதிகள் ஈரோட்டில் இருக்கும் ஒரு இன்டர்நெட் மையத்தில் பிரிண்ட் எடுக்கப்பட்டன.

வினாத்தாள்களை பிரிண்ட்செய்ய பயன்படுத்தப்பட்ட கணினிகளை அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த ஆய்வில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன .அந்த மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு பகுதியையும் விடாமல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு நடந்த குரூப் 4 , குரூப் 8 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அந்ததேர்வுகளை ரத்துசெய்வது குறித்து தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply