விசுவ இந்து பரிஷத் உள்பட சில இந்து அமைப்புகள் இடம் பெற்றுள்ள சந்த் உச்சாதிகர் சமிதி கூட்டம் அயோத்தியில் இருக்கும் கரசேவகபுரத்தில் சுவாமி வாசுதேவானந்த் சரசுவதி தலைமையில் நேற்று நடந்தது . இக் கூட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராம்லல்லா விராஜ்மன் சார்பில் வக்கீல் திரிலோக் நாத் பாண்டே அப்பீல் மனுவை தாக்கல் செய்வார் என்று முடிவு செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை முன்று சம பகுதியாக பிரித்து நிர்மோகி அகாரா, ராம்லல்லா விராஜ்மன், சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றுக்கு தலா ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது குறிபிடத்தக்கது .

Tags:

Leave a Reply