மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும் என பா.ஜ.க தலைவர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 


பா ஜ க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்வதற்காக மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது

மக்களின் உண்மையான அடிப்படைத்தேவைகளைப் புரிந்து-கொண்டு நல திட்டங்களை செயல்படுத்தாததால் இந்தஆட்சி நிச்சயம் தோல்வியடையும் . இலவச திட்டங்களால் மேலும்மேலும் ஊழல்தான் நடைபெறுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்திட்டங்கள் மறைமுக ஊழலுக்கு வழிகோலுகின்றன. முதல்வர் கூறுவது போல் தேர்தல்ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளவில்லை. தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல்ஆணையம் முயன்று வருகிறது. ரேஷன்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சிறுசிறு கடைகள், டீக்கடைகளில் கூட பணவிநியோகத்தில் ஆளும் கூட்டணிக்கட்சியினர் ஈடுபடுவதை பார்க்கும் போது, தேர்தல்ஆணையம் இன்னும் இதில் அதிகமுனைப்பு காட்ட வேண்டும் என தோன்றுகிறது. ஊழலைத்தடுக்க இன்னும் கூடுதல் கண்காணிப்பு தேவை.நடைபெறுகின்ற 5 மாநிலத்தேர்தலுக்கு பின்பு மத்தியில் நிச்சயம் மாற்றம் உருவாகும் மேலும், தமிழக சட்டசபைக்குள் இந்தமுறை கணிசமான எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் செல்வார்கள்… என்று தெரிவித்தார்

Leave a Reply