தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள் .

பாரதிய ஜனதா அகில இந்தியதலைவர் நிதின் கட்காரி 7ந் தேதி மானாமதுரை, மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

நடிகை ஹேமமாலினி 6ந் தேதி முதல் 8ந் தேதி வரை சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிரசாரம்செய்கிறார். நடிகை பிரித்விராணி 8ந் தேதி சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

10ந் தேதி அத்வானி தமிழகம் வருகிறார். அவர் 2நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.. அவர் மதுரை மற்றும் சென்னையில் பேசுகிறார். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 10ந் தேதி தளி தொகுதியில் பிரசாரம்செய்கிறார்.

Leave a Reply