தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் விஷயத்தில் சரிசமமாகதான் உள்ளது என்று , பாரதிய ஜனதா தேசிய செயலர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .

நாகர்கோவிலில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளாவில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களை பெறும். தமிழ்நாட்டில் தி.மு.க. , அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள்-பிரச்னைகளை பேசும்கட்சியாக பாரதிய ஜனதா மாறிவருகிறது.

பாரதிய ஜனதா இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என கூறவில்லை ஆனால், கணிசமான இடங்களை பிடித்து சட்டசபைக்குள் நுழைவோம். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். ஸ்பெக்ட்ரம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

இலவசங்களை தந்து தமிழகமக்களை விலைக்கு வாங்க இயலாது . ஊழல் விஷயத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இரண்டும் ஒன்றுதான். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா ,வுக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம், இந்த இரண்டு கூட்டணிகளுக்கு கடும்பாதிப்பு உருவாகும் இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்

Tags:

Leave a Reply