நடுநிலை வாக்காளர்களை கவரும் பா.ஜ., கட்சி, எட்டு சதவீத ஓட்டுகளை கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. – பா.ஜ. என்ற மும்முனை போட்டி நடந்தது. பிரதான கட்சிகளாக திகழும், அ.தி.மு.க., – தி.மு.க., கூட்டணிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது என்றபோதிலும் மூன்றாவது நிலைக்கு போட்டியிடும் பா.ஜ.கட்சி பிரதான

கூட்டணிக்கு பல தொகுதிகளை கடும் போட்டியை தரக் காத்திருக்கின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களால், வெற்றி பெறுவர் என கருதப்படும் வேட்பாளர்கள் தோற்கவும், தோற்று விடுவார் என கருதக் கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறவும் கூடிய சூழ்நிலை உருவாகும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக பா.ஜ., கட்சி இந்த தேர்தலில் குறைந்த பட்சம் இரண்டு இடங்களேனும் கைப்பற்றும் என்றும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாம் இடம் பெறும் எனவும், 100 க்கும் அதிகமான தொகுதிகளில் 10ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று மக்களின் கவனத்தை கவரும் என்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது

குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவிற்கு ஓட்டுகளை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளை கைப்பற்றும் என்றும், சென்னை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதான கட்சி வேட்பாளர்களை திணறடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை பா.ஜ.,விற்கு மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் அதிகளவு ஓட்டுகளை பெற்றுத் தரும் சூழல் நிலவுகிறது. இதை தவிர்த்து சென்னையில் பா.ஜ., போட்டியிடும் மற்ற தொகுதிகளில், கவுரவமான ஓட்டுகளை பெறும் என்று தெரிகிறது .

அதே போல் மற்ற கட்சிகளிடம் இருந்து வேறுபட்டு தமிழக வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தேசிய தலைவர்கள் அத்வானி முதல், முரளிதர ராவ் வரை பலரும் தமிழகத்தில் முகாமிட்டு தங்கள் வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரசார யுக்தி, தேர்தல் அறிக்கை, நடுநிலை வாக்காளர்கள் ஆகியவற்றின் மூலம் இம்முறை எப்படியும் 96ம் ஆண்டைப் போல் தனித்தே தமிழக சட்டசபைக்கு தங்கள் பிரதிநிதியை அனுப்புவது என பா.ஜ., முடிவெடுத்து அதில் வெற்றியும் பெறக் கூடிய சூழல் வந்துவிட்டது

Tags:

Leave a Reply