ஊழலை ஒழிப்பதற்கு நான் விரும்புகிறேன்; அதேநேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,” என்று , ராகுல் தெரிவித்ததற்கு, நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட் முன்னாள்-நீதிபதி கிருஷ்ணய்யர், காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கு தான் எழுதிய கடிதத்தில் , “நாட்டில் அதிகரித்து வரும் ஊழலைஒழிக்க ராகுல்

நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்திருந்தார் . இதற்ற்க்கான பதில் கடிதத்தில் ராகுல் தெரிவித்ததாவது , “நான் ஊழலை ஒளிப்பதர்க்கே விரும்புகிறேன்; ஹீரோ-ஆக விரும்பவில்லை’ என்று , தெரிவித்தார்.

இந்தநிலையில், குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி, “”மக்கள்பணி செய்வதே நம்கடமை. ஹசாரே போன்ற- காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதிக்கொண்டு ஒரு-போதும் பணியாற்றியது இல்லை ,” என, ராகுல் பெயரைக்குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊழல் அதிகரித்துவிட்டதால் அதை ஒழிப்பதற்காக, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். குஜராத்தை பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கிபேசி வருகின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்கு மத்திய-அரசு பல விதங்களில் இடைஞ்சல் செய்து வருகிறது. மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லாமல் , பல்வேறு நலதிட்டங்களை குஜராத் அரசு நிறைவேற்றி-வருகிறது. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடுகையில், மத்திய அரசு திட்டங்கள் எதுவும் நமக்கு கிடைபதில்லை.இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார் .

Leave a Reply