குஜராத் மாநிலத்தில் முதல் முதலாக உள்ளாட்சித்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் முறை பரிசோதனை முறையில் அறிமுகபடுத்தப்பட்டு அதில் கனிசமான வெற்றியும் கிடைத்துள்ளது.

குஜராத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் மிகசிறிய மாநகராட்சி

காந்திநகர் மாநகராட்சியாகும் . இங்கு மொத்தம் 1லட்சத்து 35ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இம்மாநகராட்சிகுட்பட்ட 11 வார்டுகளுக்கும் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . இதில் பா.ஜ.மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர் .

சோதனையின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக தேர்தல்நடத்த முதல்கட்டமாக 670 பேர் தங்ககள் பெயர்களை ஆன்லைன் மூலமாக வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். இதில் 500பேர் ஆன்லைன மூலம் தங்கள் வாக்கினை பதிவுசெய்துள்ளனர் இது குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதபடுகிறது

குஜராத்த்தின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியி தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தியுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று எனலாம். அது ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

Tags:

Leave a Reply