புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .

இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு

வருகிறது. இன்றுகாலை நிலவரபடி இவருடைய உறுப்புகளின் செயல்பாடுகள் செயல்லிழந்து வருகின்றன. கல்லீரலின் செயல்பாடு பாதிக்கபட்டதை தொடர்ந்து இரத்தழுத்தம் குறைந்து வருகிறது. இது கவலை தருவதாகவும் , சுவாசகோளாறு காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கைசுவாசம் தரப்பட்டு வருவதாகவும் கூறபட்டுள்ளது. சாய்பாபா கடந்த 28ம்தேதி சுவாசகோளாறு மற்றும் இருதயபாதிப்பு காரணமாக சாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply