ஏப்μல் 13ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தில் வருங்காலத்தில் நேர்மையும், நீதியும் நிலைத்து நிற்குமா? தமிழகத்தில் நேர்மையை நிலைநாட்ட முடியுமா? பாரத நாட்டிற்கே தமிழன் மோசமான முன்னுதாரணமாக இருக்கப் போகிறானா? என்ற கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்புகிறது.

நியாயம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் மக்கள் எல்லோரும் தேர்தல் கமிஷனைப் பாரட்டி மன மகிழ்கின்றனர்.

ஆனால் நமது மாநில முதல்வர் கருணாநிதி, தேர்தல் கமிஷனைத் தேர்தல் பிμச்சாரத்தின்போது கடுமையாகச் சாடியுள்ளார். “நான் தான் தமிழனையும் தமிழையும் காப்பாற்றி வருகிறேன்’ என்று பல்லவி பாடும் கருணாநிதியால் உலக அரங்கில் தமிழன் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை தானே ஏற்பட்டுள்ளது. பாரத நாட்டில் திருமங்கலம் பார்முலா என (ஓட்டுக்கு அதிக பணம்) ஒரு பார்முலா பரவலாகப் பேசப்படுவது தமிழ் நாட்டுக்குத் தலைகுனிவு இல்லையா?

திரவிடக் கட்சிகள் எல்லாமே தங்களால் முடிந்த அளவு பணம் கொடுத்திருக்கின்றன. திμõவிடக் கட்சியோடு கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஓட்டிற்குப் பணம் கொடுத்திருக்கிறது. ஏழைப் பங்காளன் என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்ட திரவிடக் கட்சிகள் ஜனநாயகத்தையே இன்று கேலிக்கூத்தாக மாற்றி வருகின்றன. திμõவிடக் கட்சிகள் தமிழனை இலவசத்திற்காகக் கையேந்தி நிற்கும் கேவலமான பிச்சைக்காரனாகவும், ஓட்டிற்காக பணத்தை எதிர்பார்க்கும் லஞ்சப் பேர்வழியாகவும் மாற்றி விட்டன.

தமிழகத்தில், தேர்தலில் இனி மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே நிற்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிரிமினல்களும், கட்டப் பஞ்சாயத்து குண்டர்களும் தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற அவல நிலையைக் கருணாநிதி கம்பெனியினர் உருவாக்கிவிட்டனர். தேர்தல் கமிஷனின் கடுமையான நடவடிக்கை களால் வரலாறு காணாத வகையில் தேர்தல் ஆடம்பரமின்றி பகட்டு விளம்பμங்கள் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.

தெரு முழுவதும் நாறும் ப்ளக்ஸ் பானர் இல்லாமல், சுவர்களில் நாசப்படுத்த முடியாமல், போஸ்டர் கலாச்சாμம் இல்லாமல் தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷனை நாம் பாμõட்டியே தீர வேண்டும். ஓட்டிற்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் கமிஷன் முயற்சி செய்தது. ஆனால் இந்த திரரவிடக் கட்சிக்காரர்கள் எவ்வளவு கைதேர்ந்த கில்லாடிகள். விஞ்ஞான நுணுக்கத்தோடு ஊழல் செய்பவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் காட்டிவிட்டார்கள்.

தேர்தல் கமிஷன் சுமார் 50 கோடியைக் கைப்பற்றியிருக்கிறதே அதுவே பெரிய சாதனையாகும். தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்கள் öμவின்யூ அதிகாரிகளும், போலீசும் தானே. பெரும்பாலான அதிகாரிகள் அரசியல் கட்சிக்காரர்களுக்குச் சலாம் போட்டு ஊழியம் செய்பவர்கள் தானே. இவர்களை வைத்து எப்படித் தடுக்க முடியும்.

ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, போலீஸ் கார்கள் இவற்றில் அரசியல்வாதிகள் பணத்தைக் கொண்டு சென்றார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். வருங்காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற புதிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்த புதிய யுக்திகளைக் கண்டு பிடிக்க வேண்டும். ஓட்டிற்குப் பணம் வாங்க முடியாத அளவிற்குத் தேர்தல் முறைகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் பெருமையை நாம் காப்பாற்ற முடியும்.

மக்கள் மத்தியில் பணத்தை விட நேர்மை தான் முக்கியம் என்ற உணர்வை உருவாக்க வேண்டும். கடவுள் நம் நாட்டை எத்தனையோ பிரச்னைகளில் இருந்து காப்பாற்றியுள்ளார். அதேபோல் இந்த ஊழல் பிμச்னையைத் தீர்ப்பதிலும் இறைவன் நமக்குக் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் முனைந்து சோர்வில்லாமல் செயல்படுவோம்

Tags:

Leave a Reply