பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை இந்தியா கண்டு பிடித்து இரண்டு தடவை அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளது ஆனால் அவர்கள் இந்திய உளவுதுறை தகவலை அலட்சியம்-செய்தது இப்போது தெரியவந்துள்ளது.

முதலில் 2007ம் ஆண்டு இந்திய உளவுதுறை பின்லேடன் பதுங்கிஇருந்த இடத்தை கண்டு பிடித்தது. பின்லேடன்

இஸ்லாமாபாத்துக்கு அருகில் தான் எங்கோதங்கி இருக்கிறான். என்று உறுதிசெய்த இந்திய உளவுதுறை அமெரிக்க உளவு துறைக்கு தகவல்தந்தது . ஆனால் அமெரிக்கா இதை கண்டுகொள்ளவே இல்லை.

இரண்டாவது முறையாக கடந்த 2008ம் ஆண்டு பின்லேடன் மிகவும் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலையில் இருக்கிறார் என்ற தகவல் இந்திய உளவு துறைக்கு கிடைத்தது. . மேலும் அவருக்கு சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை தர இயலாது என்ற தகவலும்-கிடைத்தது. எனவே பாகிஸ்தானில் ஏதேனும் பெரியநகரில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும் என கருதினார்கள். இதுபற்றியும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதும் அமெரிக்கா அலட்சியப்படுத்தியது.

Tags:

Leave a Reply