பின்லேடன் தங்களது நாட்டில் இல்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துவந்தது போன்று நிழல்-உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இருப்பிடம்-குறித்தும் பாகிஸ்தான் பொய் சொல்வதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் .

பாகிஸ்தானின் முழு கட்டுபாட்டையும் முஷாரப் தன்வசம் வைத்து இருந்தபோதுதான் அபோட்டாபாதில் ஒசாமாவின் இருப்பிடம்

கட்டபட்டுள்ளதை அத்வானி சுட்டிக்காட்டினார்.

வாஜபேயி பிரதமராக இருந்தபோது இந்தியா வந்த முஷாரபிடம், தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரபட்டது. ஆனால் தாவூத்-பாகிஸ்தானில் இல்லை என்று அவர் உறுதியாக-மறுத்துவிட்டார்.அதேபோன்று தான் ஒசாமா குறித்தும் அமெரிக்காவிடம் இத்தனை-ஆண்டுகளாக பொய் கூறி வந்துள்ளது என்று அத்வானி குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply