மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜியின் வீட்டுக்கு நேரில் சென்று, வாழ்த்து பெற்றது மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் கோல்கட்டாவில் இருக்கும் சோம்நாத் சட்டர்ஜி வீட்டுக்கு மம்தா பானர்ஜி திடீர் என்று சென்றார். மம்தாவின்

வருகையை சற்றும் சோம்நாத்சட்டர்ஜி எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் , அவரை வரவேற்று, வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.இதனை தொடர்ந்து , மம்தா, தான் கொண்டுவந்திருந்த இனிப்புகளை, சோம்நாத் குடும்பத்தினரிடம் வழங்கினர் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து பெற்றார்.சோம்நாத் குடும்பத்தினருடன், மம்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரை-மணி நேரத்துக்கு பிறகு , சோம்நாத்திடம் விடை பெற்று விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்

Tags:

Leave a Reply