பாகிஸ்தானில் திடீர் என்று காணாமல் போன பத்திரிக்கையாளர் சலீம் ஷாஸத் அந்நாட்டு உளவுத்துறையான ஐஎஸ்ஐ, யால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“ஏசியா டைம்ஸ் ஆன்லைன்” என்ற இணையதள பத்திரிகையில், இஸ்லாமிய-தீவிரவாத குழுக்கள் பற்றி அவர் அடிகடி கட்டுரைகள் எழுதிவந்தார். மே 22ம் தேதி கராச்சி கடற்படைத்தளத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் அவர்-கட்டுரை எழுதினார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி விவாதநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றவர் அங்கு போய்ச்சேரவில்லை. மேலும், வீட்டிற்கு திரும்பவில்லை. சலீம் ஷாஸத்துக்கு பாக். உளவுத்துறையான ஐஎஸ்ஐ, யிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாக அவரது நண்பர்கள்-தெரிவித்துள்ளனர். இதனிடையே, சலீம் ஷாஸத்தை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ,தான் பிடித்து வைத்து அவரை துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

Leave a Reply