ரெட்டி-சகோதரர்கள் விவகாரம் முடிந்துவிட்டது என மக்களவை எதிர்க்கட்சி-தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

ஆந்திர மாநிலம் கரீம்நகரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுகூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், ரெட்டிசகோதரர்கள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர்.

இது குறித்து-கட்சியின் மூத்ததலைவர் அருண் ஜேட்லியும், எடியூரப்பாவும் விளக்கம் தந்து விட்டனர். அத்தோடு இந்த விவகாரம் முடிந்து விட்டது. இது-தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.அருண் ஜேட்லிக்கும், எனக்கும் இடையே எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால், ஊடகங்கள்தான் தவறாக-செய்தி வெளியிட்டன என அவர் குற்றஞ்சாட்டினார்.

Tags; மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைவ, எதிர்க்கட்சி, மக்களவை,
எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி வரிசையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
எதிர்க்கட்சி என்ற, மக்களவை ஆகும், மக்களவை உறுப்பினர், மக்களவை தேர்தலில்

Leave a Reply