எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன். இதற்க்காக யாருடைய அனுமதியும்-தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

பாபா ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு எதிராக . பா ஜ க காந்தி சமாதியில் 24மணி நேர சத்தியாகிரக-போராட்டத்தை

மேற்கொண்டது . இந்தப்போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களுக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மாசுவராஜ் நடனம் ஆடினார்.

இதற்க்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்குப் பதில் தந்துள்ள சுஷ்மா சுவராஜ்,காங்கிரஸ்க்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேச பக்தி-பாடல்களுக்கு தான் நடனமாடினேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களைப்பாடுவேன். நடனமாடுவேன். தேசபக்திப்-பாடல்களுக்கு நடனமாட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றார்

எதிர்க்கட்சித், தலைவர், தலைவர், சுஷ்மா ஸ்வராஜ், நடனம் ஆடுவேன், சுஷ்மா ஸ்வராஜ்

Leave a Reply