சாத்வீகமும், சத்ரியமுமாய் இரு துவருவங்களும் விடுதலை போர்க்களத்தில் அன்னியரை எதிர்த்து நின்றிருந்தன.அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி அதற்கு தளபதியதியாய் இருந்தார். அவர் ஏற்று கொண்ட பொறுப்பு சாதாரணமானது அல்ல. துணைக்கு அவர் அழைத்துக் கொண்ட கூட்டாளிகளும் மிக சாதாரணமாவர்கள் அல்லர். போர் வெறியும்

அடங்காத முரட்டு சுபாவமும் கொண்டவர்கள் ஐப்பான் ராணுவத்தினர். அவர்களை தம் வசம் வைத்துக் கொள்வது மிகுந்த சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே முடியும் நேதாஜிக்கு அந்த திறன் இருந்தது.

காந்தி நேதாஜியை பற்றி "அவசரக்காரர், ஆத்திரக்காரர்" என்றும் நேரு அவரை படபடப்பானவர், பண்படாதவர்" என்றும் கூறினார்கள். ஆனால் ஸ்தாபன காங்கிரஸின் சரித்திரம் இருவரையும் வென்று எடுத்தவர் நேதாஜி என்று பதிவு செய்துள்ளது.
நேதாஜி சுதந்திர பாரதம் என்ற நிழல் அரசாங்கத்தை 1944-ல் ஏற்படுத்தினார். அசாத் இந்தியா என்ற பெயரில் கரண்சி நோட்டுகளும் புழக்கத்தில் விட்டார்.

ஒருபுறம் பாரதம் விடுதலை அடைய வேண்டும் அதற்காக அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பரவியது. ஆனால் நேதாஜி தேசம் விடுதலை அடைந்து விட்டது. அன்னியர்கள் வெளியேறுவதுதான் பாக்கி என்றார்.

ஜனவரி 23-ந் தேதி நேதாஜியின் பிறந்த நாள் அதுபோல் அவருக்கு வழி காட்டியாய் திகழ்ந்த ராஷ் பிகாரி நினைவு நாள் ஜனவரி 17-ந் தேதி வருகிறது.

16 வயதில் துறவியாக வேண்டுமென்று வெளியேறிய நேதாஜி 41-வது வயதில் காங்கிரஸின் தலைமை பதவி வரை உயர்ந்து அவர். 44-வது வயதில் ஜெர்மனி, ஜப்பான், கிழக்காசிய நாடுகளில் உள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்து பின்னர் இந்திய ராணுவத்தை அமைத்தார். அதில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த பெருமை உள்ளது.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது இறந்த தேதி குறிப்பிடபடவில்லை.

Tags:

Leave a Reply