மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் பாரதிய ஜனதா ஆதரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார் .

இன்று சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா மாநிலசெயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது .”மகளிருக்கு 33சதவீத இட ஒதுக்கீடு தரும் மசோதாவை பாஜக ஆதரிக்கும்.

மகளிர் மசோதா மாநிலங்களவையில் ஏற்கெனவே நிறைவேறியுள்ளது. மகளிர் மசோதாவை எதிர்ப்பவர்களை அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றிவிட்டு மசோதாவை நிறைவேற்றினார்கள். அதுபோன்று நடக்காமல் எம்பிக்களின் முழு ஆதரவுடன் மக்களவையில் இந்தமசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.” என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply