மும்பை குண்டுவெடிப்புகளுகாக பலிகடாக்களைத்தேட காங்கிரஸ் முயற்சிக்க கூடாது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் “எல்கே.அத்வானி” குறிப்பிட்டுள்ளார் .

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவரிடம் உள்துறை_அமைச்சக இலாகாவை தந்தது பெரிய தவறு என மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் கூறியிருந்தார் .

அதற்கு பதில் தரும் விதமாக அத்வானி இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார் . மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தை தேசியவாத காங்கிரஸ் வைத்திருபதால்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என மகாராஷ்டிர_முதல்வர் கூறியுள்ளதை படிக்கும்_சாதாரண மனிதருக்கும் வியப்பு உருவாகும் என்று அத்வானி தெரிவித்தார் .

தீவிரவாதம் தொடர்பான மத்திய-அரசின் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும் என தெரிவித்த அத்வானி, மகாராஷ்டிர_முதல்வரையோ, மாநில_உள்துறை அமைச்சரையோ குற்றம்சொல்ல முடியாது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என அத்வானி தெரிவித்தார் .

Tags:

Leave a Reply