தமிழகத்தில் ராணுவ கல்லூரியில் போர்பயிற்சி பெறவந்திருந்த இலங்கை ராணுவ வீரர்கள், கடும் எதிர்ப்பு கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் . அவர்கள் பெங்களூரிலிருந்து விமானத்தில் நாடு_திரும்பினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே இருக்கும் வெலிங்டன் ராணுவ கல்லூரி வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெறுவது வழக்கம்.
இந்நிலையில் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற இலங்கையிலிருந்து 25 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் இருக்கும் ஒருதனியார் ஓட்டலில் தங்க வைக்கபட்டு இருந்தனர்.

இதை அறிந்த நாம் தமிழர் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் போராட்டத்தில் குதித்தனர் .மேலும் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பபட்டனர்.

Tags:

Leave a Reply