கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுகொண்டுள்ளது.

முன்னதாக சட்டவிரோத சுரங்கத்தொழில் விவகாரத்தில் எடியூரப்பாவை கர்நாடக லோக்ஆயுக்த அறிக்கை சுமத்தியது .

எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன .

இதுதொடர்பாக விவாதிப்பதற்கு பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரியின் இல்லத்தில் பாரதிய ஜனதாவின் ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது .

பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அருண்ஜேட்லியும், ராஜ்நாத்சிங்கும் நாளை பெங்களூர் கர்நாடக பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply