இலங்கை இறுதிகட்ட போரில் அப்பாவி மக்களை கொத்து குண்டுகளை_வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என உலக நாடுகளின் குற்றசாட்டை, முதல் முறையாக அந்நாட்டு அரசு ஒப்புகொண்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதவது : பாதுகாப்பு வளையப்பகுதிகளை உருவாக்குவதன்

மூலமாக , போர்ப்பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டது . போரின்போது அப்பாவி மக்களில் ஒருவர்கூட கொல்லபட கூடாது என்பதுதான், அரசின் கொள்கை முடிவு.

இது பல்வேறு_பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலமாக இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தபட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிகைகளையும் மீறி, போர்ப்பகுதிகளில் அப்பாவி மக்களின் மீதான தாக்குதலைத்தவிர்க்க முடியாமல் போய்விட்டது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply