காங்கிரசால் மக்களையும், நாட்டையும் காப்பாற்ற இயலாது . எனவே, ராஜினாமா செய்து விட்டு_போங்கள் என பாரதீய ஜனதா. மாநில துணை தலைவர் பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது ;

இந்தியாவில் குண்டுவெடிப்பு கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . சமீபத்தில் கூட மும்பை குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் . இதை மத்திய_அரசால் தடுக்க முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. டீசல், பெட்ரோல் விலை நாளுக்கு_நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் முகத்தை வாஜ்பாய்யின் முகத்தில் பார்த்தேன். எனவே தான் பாரதீய ஜனதாவில் இணைந்தேன்.

இன்னும் ஒருவருடம் வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தால் இந்தியநதிகளை இணைதிருப்பார். இந்தியாவும், மக்களும் காப்பாற்றபட வேண்டும். இந்த நாட்டை காப்பாற்ற பாரதீய ஜனதா கட்சியால் தான் முடியும். பா. ஜ. க, வை விட்டால் இந்த நாட்டில் வேறுவழியில்லை என்றார்.

Tags:

Leave a Reply