இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வந்தால், கச்சத்தீவுக்கு சென்று தேசியக்கொடியை ஏற்றும் போராட்டத்தை மேற்கொள்வோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,

தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது . இதற்க்கு பிறகும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்.

தமிழக மீனவர்கள்_விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டிற்கு பாரதிய ஜனதா சார்பில் கண்டனம்_தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக அரசு சமச்சீர் கல்வியை உடனடியாக_அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். தற்போது மாணவர்களின் காலாண்டு_தேர்வு கேள்வி குறியாகி உள்ளது.
3 மாதம் தமிழக அரசை விமர்சனம் செய்யகூடாது என்று முடிவு செய்திருக்கிறோம் . எனவே சமசீர் கல்வியை அமல்படுத்த_வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply