சுமார் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையால் கொல்லபட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளும் , பொருட்களும் கொள்ளையடிக்கபட்டுள்ளன.

இந்த ஆண்டு மட்டும் 6மீனவர்கள் சுட்டு கொல்லபட்டுள்ளனர். அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக தவறிய

மத்திய_அரசையும், தொடந்து தாக்குதலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசையும் கண்டித்து இன்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை_தாங்குகிறார்.

இன்று நடைபெறும் கடல் முற்றுகை போராட்டத்துக்கு மீனவர்கள் படகுகளை தரகூடாது என காவல் துறை மீனவ சங்க நிர்வாகிகளை எச்சரிதுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

காவல்துறையினரின் தடையை மீறி ராமேஸ்வரத்தில் திட்டமிட்டபடி கடல் முற்றுகை போராட்டத்தை நடத்த பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இந்த கடல் முற்றுகை போராட்டத்தில் பங்குகொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரகணக்கான தொண்டர்கள் ராமேஸ்வரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளனர்

Tags:

Leave a Reply