டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமியின் வீடு இருக்கிறது .

நேற்று மாலை அவர் வீட்டுக்குள் 15பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசிதாக்கியது.

அதில் 5பேர், வீட்டின் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்று தோட்டத்திலிருந்த மலர் தொட்டிகளை உடைத்துள்ளனர் . மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும்_காங்கிரஸ்க்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர் .தாக்குதல் நடந்தபோது வீட்டில் சுப்பிரமணியசாமி இல்லை.

2G ஊழலை வெளி உலகுக்கு கொண்டுவந்தவர், இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 2G ஊழலை இவர்கள் குழிதோண்டி புதைத்திருப்பார்கள் மேலும் புது புது ஊழல்களை கண்டுபிடித்து  இந்த தேசத்தை சுரண்டியிருப்பர்கள்

Tags:

Leave a Reply