சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வந்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு இந்து முன்னணி சில கருத்துகளை முன் வைக்கிறது.

சமச்சீர் கல்விக்காக தயாரிக்கபட்ட பாடநூல்களில் உள்ள நாத்திக, முன் ஆட்சியாளர்களின் சுயபுராணங்கள், தேசவிரோத, சமூக விரோதக் கருத்துகளை நீக்கிவிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். பகுத்தறிவு எனும் பெயரில் திட்டமிட்டு புகுத்திய இந்து விரோதக் கருத்துகளையும் நீக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் ஆன்மீகக் கல்வியே சிறந்த கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறியிக்கிறார். இதனைப் பல பெரியோர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி அதுல் கலாம் அவர்களும் நமது பண்பாடு, கலாச்சாரத்தோடு கூடிய தேசியக் கல்வியை மாணவர்ளுக்குக் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆன்மீகக் கல்வியின் மூலம் மாணவர்களிடையே ஒழுக்கம், பண்பாடு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை, பெரியோர்களை மதிக்கும் மாண்பு, தேசபக்தி போன்ற நற்சிந்தனைகள் ஏற்படும். இதற்கு ஔவையின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, உலகநீதி, திருக்குறள் போன்ற நூல்களைப் பயிற்றுவிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் நமது தேசிய இதிகாசங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தேச விடுதலைப் போராட்ட வரலாற்றையும் கற்பிக்க வேண்டும்.

இதனைப் பள்ளியில் அறிமுகபடுத்துவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதினால், தமிழக அரசு ஒவ்வொரு கோயில்களிலும் நல்லொழுக்கக் கல்வியை, சமயக் கல்வியைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சமயம், தேசியம் பற்றிய சிந்தனையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டமும், பயிற்றுவிப்போரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாணவர்களை ஊக்குவிக்க பரிசுப்போட்டிகளையும் நடத்தலாம். இத்தகைய நற்சேவையைக் கன்னியாகுமரி வெள்ளிமலை சுவாமி மதுராந்தக மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிற ‘சமய வகுப்பு’ ஆசிரிய பெருமக்களையும் இதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஆன்மீக அமைப்புகளோடும், இந்து இயக்கங்களோடு இணைந்து இந்த நற்கல்வியை ஏற்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply