ஈரோடு பாஜக மற்றும் விவசாயிகள்_சார்பில் வ.உ.சி. பூங்காவிலிருந்து ஊர்வலம் நடந்தது. இந்தஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது

தேசிய மயமாக்கபட்ட வங்கிகளில் விவசாயிகள் டிராக்டர்கள்

வாங்குவதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்க்கும் கடன்வாங்கி உள்ளனர். இந்த கடன் தவணையை கட்டதவறினால் விவசாயிகளின் டிராக்டர்கள் மற்றும் சொத்துக்கள் ஜப்தி செய்யபடுகிறது. விவசாயிகள் வாங்கிய கடனுகாக அவர்களது சொத்துகளை ஜப்தி செய்யகூடாது என கூறப்பட்டுள்ள போதிலும் தனியார் ஏஜென்டுகள் மூலம் ஜப்தி நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடுவது சட்டத்துக்கு_புறம்பானது

விவசாயிகளுக்கு முழுஉரிமை கிடைக்கும் வரை இந்தபோராட்டம் தொடரும். வங்கிகள் விவசாயிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யகூடாது என்றார்

Tags:

Leave a Reply