முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லபட்டார்.

இந்த கொலை வழக்கில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சாந்தன்,முருகன், பேரறிவாளன் , முருகனின் மனைவி நளினி

போன்றோருக்கு 1999ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கபட்டது.

இந்த மரணதண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது. நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள்தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன்ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், இவர்களது கருணை மனுகளை ஜனாதிரதி பிரதிபாபாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply