ஊழலுக்கு எதிராக பேசுபவர்களின் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு மீண்டும் எமர்ஜென்சி காலசூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கு கிறது என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

ஜன லோக்பால் மதோ வை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் சமூக சேகவர் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ்_கட்சி ஞாயிற்றுகிழமை

கடுமையாக விமர்சித்துள்ளது.

இதற்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசைன், தில்லியில் ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

காங்கிரஸ்சின் ஊழல்கள் குறித்து பேசுபவர்களை அடக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சிகிறது. முன்பு டில்லி ராம்லீலா மைதானத்தில் அமைதியான_முறையில் உண்ணாவிரதம் இருந்த பொதுமக்ளின் மீது தடியடி மேற்கொண்டனர் . சமீபத்தில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதாவினர் மீதும் போலீஸரை ஏவிவிட்டனர். முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எமர்ஜென்சி_நிலை மீண்டும் வந்ததுபோன்று உள்ளது என்றார்.

முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சித்த ஹசாரேவை, கபில் சிபல் கடுமையாக கண்டித்து பேசினார். ஹசாரே மீது ஊழல் குற்றசாட்டுகளை சுமத்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி, ஜன லோக்பால் மசோதா தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தவும், ஆர்ப்பாட்டத்து க்கும் அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply