பாஜக ஆட்சி வந்தால் கச்சத்தீவை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறினார் .

ராமநாதபுரத்தில் செவ்வாய்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது, அவர்களை தாக்குவதையும், கொலைசெய்வதையும் இதுவரை இலங்கை

அரசு நிறுத்திக்கொள்ளவே இல்லை.விடுதலை புலிகளுக்கு உதவிசெய்வதால்தான் தாக்குதல் நடதுகிறோம் என கூறிய இலங்கை அரசு, போர் முடிவுக்கு வந்த பிறகும் தாக்குதலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது .

இதன்மூலம் இலங்கைஅரசு தமிழர்களுகு எதிரான நிலைபாட்டை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இலங்கை ராணுவம் நடத்தி_முடித்த கொடுமைகள் குறித்து தொலைகாட்சிகள் பகிரங்கமாக ஒளிபரப்பியும், அதற்குப்பரிகாரம் தேடாமல், மீண்டும் பிடிவாதத்தையே கடைபிடித்து வருகிறது. இனியும் தாமதிகாமல் அங்குவாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கை கள் எடுக்கபட வேண்டும்.இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழகமீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. குரல் எழுப்ப இருக்கிறது.. பா.ஜ.க. ஆட்சிகு வந்தால் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிகைகளும் எடுக்கபடும். மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply