வேதாரண்யத்தில் பா ஜ க சார்பில் கறுப்புபணம் மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து, இந்தியமீனவர்கள் இலங்கை ராணுவத்தினால் தாக்கபடுவதை தடுக்கதவறிய மத்திய அரசை கண்டித்தும் பொதுகூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்

கலந்துகொண்டு பேசினார். அப்போது_அவர் கூறியதாவது:

ஊழலுக்கே காங்கிரஸ்தான் காரணம், நேரு காலத்திலிருந்து இன்றுவரை ஊழல் மலிந்துவிட்டது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை நீக்கிவிட்டு மாற்றாக அ.தி.மு.க ஆட்சியை கொண்டுவந்தது போன்று மத்தியிலும் 2014ம் ஆண்டு (அ) அதற்கு முன்பாக வரும் பாராளுமன்ற_தேர்தலில் ஆட்சி மாற்றதை கொண்டு_வர வேண்டும்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் 63 இடம் கேட்டு அதில் 5இடங்களில் மட்டுமே வெற்றி_பெற்றுள்ளனர். எனவே காங்கிரஸ் மரண படுக்கையில் இருக்கிறது . அதை எடுத்து செல்வதற்க்கு நான்குபேர்தான் தேவை. ஆனால் ஒரு_ஆள் கூடுதலாக வந்துவிட்டார்கள். அவர் கொள்ளிசட்டி தூக்கி_செல்பவராக இருக்கலாம்.

காங்கிரசுக்கு அடுத்தது பாரதீய ஜனதா தான், வேறு எந்த கட்சியும் வர வாய்ப்பில்லை, மாற்றத்தை ஏற்படுத்த இது நல்ல தருணம், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பா,ஜ,க வுக்கு ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply