நாட்டை ஆளும் கொடியவர்களை_எதிர்த்து போராடி, தங்ககள் உடல் நலத்தை கெடுத்து கொள்ளவேண்டாம். உண்ணாவிரத போராட்டம்_இன்றி, அமைதியான_முறையில் தங்கள் போராட்டதை தொடரவேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு, சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது , தங்களது உண்ணாவிரத போராட்டதின் மூலம், நாட்டிலிருந்து ஊழலை முற்றிலும் ஒழித்துவிட முடியாது , இதற்காக வீணாக தங்கள் உடல் நலத்தை கெடுத்துகொள்ள வேண்டாம்.

உங்களது போராட்டதை குறைகூறுவதாக தாங்கள் நினைத்து கொள்ளவேண்டாம். நாட்டை ஆளும் துரோகிகளுகு எதிரானபோரில், வீணாக உங்களை இழக்காதீர். தங்களது உடல்நலனை கருத்தில்கொண்டு இதை கூறுவதாக அவர் எழுதியுள்ளார்.

Leave a Reply