1966ல் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நேரம். சென்னையில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்திக்க 18 வயதான பேரன் கனவேல் வந்தான். கனகவேல் காமராஜரின் சொந்த சகோதரியான நாகம்மாளின் மகள் வயிற்றுப் பேரன்.

"தாத்தா நான் எம்.பி.பி.எஸ் சேர முடிவு செய்து அதற்கான நேர்முகத் தேர்வும் எழுதியுள்ளேன். நீங்க ஒரு வார்த்தை

முதலமைச்சர் கிட்ட சொன்னா எனக்கு இடம் கிடைச்சுடும். லிஸ்ட் போடறதுக்குள்ளே சொல்லுங்க தாத்தா! நம்ம குடும்பத்திலே நான் ஒருவனாவது படிச்சு டாக்டராகி விடுவேன்" என்று கெஞ்சம் குரலில் வேண்டினான்.

அப்போது பேரனைப் பாhத்து, "கனவேலு இந்த டாக்டர் படிப்பு, இஞ்சீனியர் படிப்புக்கெல்லாம் கவர்மெண்ட் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லோருக்கும் பொதுவாக செலக்ஷன் கமிட்டி போட்டுட்டு, அப்புறம் இவனுக்குக் கொடு, அவனுக்குக் கொடுன்னு சிபாரிசு பண்ணறதுன்னா, அந்தக் கமிட்டியே போட வேண்டியதில்லையே. உனக்கு திறமையிருந்தால் சீட் கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயம்புத்தூர்ல பி.எஸ்.ஸி., அக்ரிகசல்சர்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதுலே சேர்ந்து படி. அந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இதுக்கு என்னால் சிபாரிசு செய்ய முடியாது" என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு போன் போட்டா பேரனுக்கு இடம் கிடைத்திருக்கும். அந்தப் பையனுக்கு அந்த ஆண்டு இடம் கிடைக்கவில்லை.

"ஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே" என்றார் கண்ணதாசன்!

காங்கிரசாரே … உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் … இன்றைய உங்கள் நிலை என்ன?

Leave a Reply