லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நேரம் விட்டது . 8வது முறையாக லோக்பால்மசோதா அவையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. கடந்த ஆட்சியிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த 43வருடங்களாக லோக்பால்மசோதா நிறைவேறாமல் உள்ளது.

பல முறைகேடுகள் காரணமாக நாட்டு மக்கள் கோபமாக உள்ளனர். தற்போது நடைபெறும் பெரிய போராட்டத்துக்கு மத்திய அரசே பொறுப்பு.

அரசின் நோக்கம் குறித்து அன்னா குழுவினர் எங்களிடம் கவலை தெரிவித்தனர். மசோதா வரைவுதொடர்பாக மத்திய அரசு எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை.

லோக்பால் வரம்பில் பிரதமரை சேர்க்காமல்விட முடியாது. வாஜ்பாய் லோக்பால் வரம்பில் சேர விரும்பினார். நீதி துறையை லோக்பால் வரம்பில் சேர்க்க தேவையில்லை. தேசிய நீதி கமிஷன் அமைக்கபட வேண்டும்.

பார்லிமென்ட் எம்.பி.க்களின் நடவடிகையை லோக்பாலில் சேர்க்கவேண்டும். சி.பி.ஐ_யையும் லோக்பாலில் சேர்க்க வேண்டும். வலுவான லோக்பால்மசோதா கொண்டு வரபட வேண்டும். மத்திய அரசின் சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்

{qtube vid:=afsIMlDuRWE}

Tags:

Leave a Reply