முருகன்-நளினி தம்பதிகளின் மகள் அரித்ரா தனது தந்தையை காப்பாற்ற கோரிக்கை விடுத்து வருகிறார். 20வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்துவருகிறார்.

நேற்று அரித்ரா தனது தந்தையை காப்பாற்ற நடந்துவரும் போராட்டங்களில் தானும் பங்கேற்க விரும்புவதாக தமிழ் தொலைகாட்சிக்கு தந்த பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

சோனியாகாந்திக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஒரு பெண்ணாக, உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகன், மகள் தங்களது தந்தையை இழந்துவாடும் பிரிவை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

தாய், தந்தை இல்லாமல் வாழும் எந்த குழந்தையும் எப்படிபட்ட சிரமங்களை_சந்திக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

அதே நிலையில்தான் இன்று நான் உள்ளேன். பெற்றோர் இருந்தும் அவர்களுடன்_சேர்ந்து வாழமுடியாத அவல நிலையில் இருக்கிறேன் . உங்கள் மகள் தந்தையை இழந்து வாடுவதை போன்று நானும் தந்தையை இழந்து வாடப்போகிறேன் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது .

எனது தாயாருக்கு கருணைகாட்டி, மனமிரங்கி, மன்னித்து ஆயுள் தண்டனை யாக மாற்றி எனக்கு அருள்புரிந்தீர்கள். இன்று அதே போல எனது தந்தைக்கும் மனம்_இரங்கி, அவரது உயிரை காப்பாற்றுங்கள். எனது அப்பாவுடன் நான் சேர்ந்துவாழ அனுமதி தாருங்கள் . எனது தந்தையை மன்னி யுங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply