மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் இந்து கடவுள்களின் வேசத்தில் பேனர்களை வைத்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

இது குறித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் தெரிவித்ததாவது ,

திட்டமிட்டே இவர் கோடிகணக்கான இந்து மக்களின் மனதை

புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தை சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து_கடவுள்களான முருகனையும், சிவனையும் படைக்க முடியும்?

தமிழகத்தின் அன்னா ஹசாரே என தன்னைத்தானே வர்ணித்து பேனர்களை வைக்கச்சொல்லும் விஜய், தனது சம்பளம் எவ்வளவு_என்பதை வெளிப்படையாக சொல்வரா?

வேலாயுதம் படத்தை ஓடவைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவர் தந்தை எஸ்ஏ.சந்திர சேகரும் இந்துமதத்தை புண்படுத்தும் இது போன்ற செயல்களை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்தபேனர்களை திருப்ப பெற்றுகொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்டகளத்தில் இறங்கும் என இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் தெரிவித்துள்ளார்.


சிந்திக்க ; அன்னா ஹசாரே என்பவர் ஒரு படத்தின் ஒரு பாடல் முடிவதர்க்குள் உருவான ஈஷல் கிடையாது , தனது 70வது ஆண்டுகால வாழ்க்கையில் அவரது ஒழுக்கம் , சேவை , தன்னடக்கம், தியாகமே ஒரு அன்னா ஹசாரேவை ஊருவக்கியது , அவர் ஒரு ஆழமரம்,

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத கூட்டத்தில் பங்குகொண்டு பேசிவிட்டால் நீங்கள் அன்னா ஹசாரேவாக ஆகிவிட முடியுமா, இது தான் உங்கள் தன்னடக்கம்

 

தமிழ் தாமரை vm வெங்கடேஷ்

Tags; விஜய் நடிக்கும், விஜய் நடித்த,  , விஜய் செய்திகள், விஜய் நண்பன், மக்கள் இயக்கம்

Leave a Reply