முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சனம் செய்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சாயல்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராஜிவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது எதிர்க்கட்சியினர் எதுவும் கூறவில்லை. அதேபோல் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவின் தண்டனையை குறைக்கக் கோரி காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் சும்மா இருப்பார்களா? என உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

உமர் அப்துல்லா இவ்வாறு கூறுவது இந்தியாவின் ஜாதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும், தமிழக சட்டமன்றத்தில் மனிதாபிமான அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சிப்பது நல்லதல்ல என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply