நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றஉதவிய கருணாநிதி, மற்ற மூவர் பற்றி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,” என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசியதாவது ; இரு வாரங்களுக்கு முன்பு , பாரதிய

ஜனதா மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் முத்திருளப்பன், நிலப்பிரச்னை_தொடர்பாக பெருநாழி போலீஸ் ஸ்டேஷனில், ஊராட்சி தலைவர் மீது புகார்கொடுத்தார். ஊராட்சி
அடியாட்களுடன் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, புகார்கொடுத்தவரை தாக்கியதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் நடந்த அராஜகம், அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. பார்லிமென்டை தாக்கிய அப்சல்குருவிற்கு ஆதரவாக காஷ்மீர் முதல்வர் பேசியது, இந்திய ஜனநாயகதிற்கு விரோதமானது.மத்திய அமைச்சராக இருந்தவர், இதுபோன்று பேசுவது அபத்தமானது.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அப்சல் குருவை தூக்கில் போட்டபிறகு, மற்ற விஷயத்தை பேசலாம். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து_இடங்களிலும் பாரதிய ஜனதா போட்டியிடும். எங்கள் தலைமையை ஏற்கும்_கட்சியை சேர்த்து கொள்வோம். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply