குஜராத் ஆளுநர் கமலா பானிவாலை அப் பதவியிலிருந்து திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் பாஜக கட்சியினர் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று காலை சந்தித்து வலியுறுத்தினர்.

குஜராத்தில் நரேந்திர மோடி அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை புதிய லோக் ஆயுக்த நீதிபதியாக ஆளுநர் பானிவால் நியமனம் செய்திருந்தார். இதை மாநில முதல்வர் மோடியும் பாஜக தலைவர்களும் கண்டித்தனர்.

இந்நிலையில் அத்வானி தலைமையில், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி , எஸ்.எஸ். அலுவாலியா, கோபிநாத் முண்டே, அனந்த குமார், பாஜக.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.

குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்த நியமன விஷயத்தில் அம்மாநில ஆளுநர் அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளார் என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

Tags:

Leave a Reply