10 கோடி மதிப்பிலான மில்லை அபகரித்த புகாரில் முன்னாள் திமுக கைத்தறி துணி நூல் துறை_அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் சிக்குகிறார்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் கே.கே.நகரில் குடியிருக்கும் நடராஜன் செட்டியார் மனைவி தனலட்சுமி தந்த புகாரில், ” எனது கணவர் நடராஜன் செட்டியாருக்கு சொந்தமான ‘ஜே.கே.கே.நடராஜ நூற்பாலை’, சேலம் மாவட்டம் சங்ககிரி

தாலுக்கா வீராச்சிபாளையம் கிராமத்தில் (தேசிய நெடுஞ்சாலை எண்: 47ல்) அமைந்துள்ளது.

6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நூற்பாலையின் மதிப்பு 10 கோடி ரூபாய். இந்த மில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின்ரோட்டில் வசிக்கும் செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஈரோடு வழக்கறிஞர் பழனிச்சாமி, திமுகவைச்சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலியான ஆவணங்களை தயாரித்து மில்லை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இந்த மில்லில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை கழற்றி விற்றுவிட்டனர். இது சம்பந்தமாக கடந்த 2010ம் ஆண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி காவல்நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாணிக்கம் ஆகியோர் பெயரை நீக்கிவிட்டு புதிதாக ஒரு புகார் மனு எழுதிக்கொடுக்கும்படி என்னிடம் வாங்கிக்கொண்டனர். அந்த புகார் மனுவிற்கு ரசீது மட்டும் கொடுத்தவர்கள் மேற்கொண்டு காவல்நிலையத்திற்கு வரக்கூடாது என்று என்னை மிரட்டி அனுப்பிவைத்தனர்.

தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு சம்பந்தமாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் நான் இங்கே மனு கொடுக்க வந்துள்ளேன். என புகாரை பெற்றுக்கொண்டு எனது மில்லை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply