ஒரு மாணவன் தனது 16வயது பருவ வெற்றி பெறுபவன் என்றால் அவன் வாழ்க்கையில் சாதனைகளை படைக்க இயலும் அழகு எவ்வளவு மேன்மையானதோ அதேபோன்று ஆபத்து நிறைந்தது. நீங்கள் படித்து உழைத்து அதன் மூலமாக வாங்கும் முதல் பொருளானது விலை உயர்ந்தது. மாணவாகள் மனதையும், உடலையும் நல்லநிலையில் வைத்து கொள்ளவேண்டும்.

பலம் உள்ளவனால் வெற்றிபெற முடியாது விடா முயற்சி உடையவனே வெற்றி பெறுவான். படிப்பு வரவில்லை என்று பள்ளியிலிருந்து விரட்டப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்னின் விடாமுயற்சியே வெற்றி பெற்றது.

எவன் ஒருவன் எனக்கு_வராது என தனது எல்லையை நிர்ணயிக்கின்றானோ அவன் அதில் இருந்து மீளமுடியாது. உளி கொண்டு வலியுடன்_செதுக்கும் சிலைதான் கோவில்களில் அனைவரும்_வணங்கும் தெய்வமாக திகழ்கின்றது. வலியின்றி பிளக்கும் கற்கள், படிகற்களாக மாறுகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளின் திறமையை உணர்ந்து அதை வெளிகொண்டு வர உதவவேண்டும். அதை விடுத்து அவர்களின் ஆசைகளை திணிக்க கூடாது என்று தெரிவித்தார் .

Leave a Reply