தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட மாவட்டங்கள் தோறும் இன்று(07.09.2011 ) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :

உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் முதல் 13ந் தேதி வரை மாவட்ட மையங்களில் விருப்ப மனுக்களை வழங்கலாம். பொறுப்புகளில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரையும் செய்யலாம். மேலும், 14 மற்றும் 15 ந் தேதிகளில் மாநில நிர்வாகிகள் விருப்பமனுக்களை நேரில் பெறுவார்கள். அவர்களிடமும் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து வெளியிட வசதியாக 3 பிரிவுகளாக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும். அதன்படி, விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் போட்டியிட தேர்வு செய்யப்படும் இறுதி வாக்காளர் பட்டியில் 16 ந் தேதி அறிவிக்கப்படும்.

மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியில் 17 ந் தேதியும், கோவை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியியல் 18 ந் தேதியும் அறிவிக்கப்படும் என்றார்.

Tags:

Leave a Reply