அமெரிக்காவுடன் அணுசக்தி_ஒப்பந்தம் மேற் கொண்டதை எதிர்த்து, மன்மோகன்சிங் அரசுக்கு தந்து வந்த ஆதரவை, இடதுசாரிகள், 2008ல் வாபஸ் பெற்றன. இதை தொடர்ந்து, பார்லிமென்டில் 2008 ஜூலை 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற, பாரதிய ஜனதா , எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கபட்டது. லஞ்சமாக கொடுக்கபட்ட ஒரு கோடி ரூபாய் பணம், நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதம் நடைபெறும் போதே, அனைத்து எம்.பி.,க்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. இதை, “டிவி’யில் ஒளிபரப்பு செய்தபோது மக்கள் அதிர்ந்து போயினர். இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் அமர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து பாரதிய ஜனதா , முன்னாள் எம்.பி.,க்களான பகன்சிங் குலாஸ்தி மற்றும் மகாவீர் சிங் பக்கோரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் குடுதவரும் ஜெயிலில் நாட்டு மக்களுக்கு அதை தெரியபடுத்திய பிஜேபி எம் பி களும் ஜெயிலில். மக்களுக்கு உழைக்க வேண்டிய காங்கிரஸ், மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கிறது. நாட்டு பற்றுடன் வேலை செய்யும் பிஜேபி மீது காங்கிரஸ் தனது ஆட்சியினை துஷ்ப்ரயோகம் செய்கிறது. அதுசரி மன்மோகன்சிங் அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்த அமர்சிங் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பலன் அடைந்த மன்மோகன்சிங்????? மக்களே சிந்திப்பீர்

Tags:

Leave a Reply