டில்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தாங்கள் தான் பொறுப்பு என கூறி, மற்றொரு தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது . இதில், "டில்லி உயர்நீதிமன்ற த்தில் புதன்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் , குண்டு வெடிப்பை நிகழ்த்த, அன்றைய புதன்கிழமையை தேர்வு செய்தோம். இது நிற்கபோவதில்லை.

வரும் செவ்வாய்கிழமை, வணிகவளாகம் ஒன்றில் மீண்டும் ஒரு குண்டு வெடிக்கும்' என்று தைரியமாக மிரட்டல் விடுக்கிறார்கள்

நாம் மதத்தால் பிரிந்திருக்கும் வரை காங்கிரஸ்க்கும் தீவிரவாதிகளுக்கும் கொண்டாட்டமே , சொல்லி வைத்து குண்டு வைக்கிறார்கள் ஜீரோக்கள் ஆட்சி செய்வதால் தீவிரவாதிகள் ஹீரோக்களாக ஆகிவிட்டார்கள், சொல்லி வைத்து குண்டு வைப்பதால் பல கோடி ரூபாய் தீவிரவாத இயக்கங்களுக்கு ஊக்கதொகையாக சென்று கொண்டுள்ளது, ஆனால் இந்த பாரத தேசத்துக்கு வரவேண்டிய பலாயிரம் கோடி அந்நிய முதலீடு வரத்து குறையும் அபாயம் உள்ளது இதுதானே தீவிரவாதிகளின் இலக்கு,

அறிவும் திறமையும் உடைய பல கோடி இளைங்கர்களை பெற்ற இந்த தேசம் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக பல அப்பாவி உயிகளை தீவிரவாதிகளுக்கு தாரைவார்க்கிறது, இளைய சமுதாயம் தானுண்டு தன வேலை உண்டு என்றில்லாமல் தங்கள் அரசியல் அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் , மதசார்பின்மை எது போலி மதசார்பின்மை என்பது எது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் , ஒவ்வொரு இளைஞனும் தெளிவான அரசியல் அறிவை பெறுவதன் மூலம் மட்டுமே சிறந்த தலைமையை பெறமுடியும்

 

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply