முதல்_அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. ஆனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது ,

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது ஆனால் நீதிபதிகள் அதை மறுத்துவிட்டனர்.

ஜெயலலிதா விரும்பினால் அவர் விருப்பபட்ட நாளில் விசாரணையை வைத்து_கொள்ளுமாறு விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிட முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர் .இதைதொடர்ந்து ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில்_ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply