பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும், நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பார்வையிட்டு உண்மை நிலையை அறியவும், பாஜ எம்.பி.க்கள் அடங்கிய குழு தமிழகம் வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது ,

”பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும், நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பார்வையிட்டு உண்மை நிலையை அறியவும், பாஜ எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அகில இந்திய பாஜ தலைவர் நிதின் கட்கரியிடமும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிடமும், தமிழக பாஜ சார்பில் கோரிக்கை வைத்தோம்.

இந்த கோரிக்கையை ஏற்று அர்ஜுன்ராம் மெக்வால் எம்.பி.யும், கிரிட் சோலங்கி எம்.பி.யும், முன்னாள் எம்.பி. ராம் நாத் கோவிந்த், செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் அடங்கிய குழு, 16ம் தேதி தமிழகம் வருகிறது.

அன்று காலை மதுரையிலும், மாலையில் பரமக்குடியும் இந்தக் குழு செல்கிறது.

அங்கு பாதிக்கப்பட்டவர்களையும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கும் சென்று குழுவினர் ஆறு தல் கூறுகிறார்கள். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் இந்தக் குழு சந்திக்கிறது.

17ம் தேதி, சென்னையில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்த பின் பத்திரிகை யாளர்களை சந்திக்கிறார் கள். இந்த குழுவினருடன் நானும், மாநில நிர்வாகிகள் எச்.ராஜா, சுப.நாகராஜன், சரவண பெருமாள், பழனிவேல்சாமி, சுரேந்திரன், முருகன் ஆகியோரும் செல்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply