வளர்ச்சி திட்டங்கள் ,மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என மூன்று நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பேசிய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.

உண்ணாவிரதத்தை நிறைவு செய்த பின் பேசிய நரேந்திர மோடி, உண்ணாவிரதம் நிறைவு பெற்றிருக்கலாம். ஆனால் வளர்ச்சிக்கான

பணி தொடர்ந்து நடைபெறும். சத்பாவனா மிஷன் மூலம் இந்தியா ஒன்று பட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. மக்கள் அனைவரும் ஒன்றுகூட இந்த போராட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

உண்ணாவிரத போராட்டம் அரசியலுக்காக அல்ல. தேசத்திற்காக சத்பாவனா மிஷன் குஜராத் மாநிலத்திற்காக மட்டும் அல்ல. இந்திய நாட்டிற்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்தியாவும், இந்திய மக்களும் பெரிய விஷயஙகளை பற்றி சந்திக்க வேண்டும். எந்த விஷயமும் முடியாதது அல்ல. நாம் அரசை வழிநடத்தவில்லை. அதனால் தான் தேர்தலில் வெற்றி பெற்றோம். நான் சிறுபான்மையினருக்காகவோ, பெரும்பான்மையினருக்காகவோ பாடுபடவில்லை.

குஜராத்திற்காக பாடுபட்டேன். குஜராத் மாநில விவசாய வளர்ச்சியை உலக வங்கி பாராட்டியுள்ளது. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் மக்களின் இயக்கமாக மாற வேண்டும். விரைவில் அனைத்து குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து போராட்டம் உண்ணாவிரத போராட்டம் தொடரும். நாடு முன்னேறி செல்ல குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என கூறினார்.

{qtube vid:=mbeMLUe8Ak0}

Tags:

Leave a Reply